“டைகர் ஷெராஃப்பின் ‘கண்பத்’ மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும்”… ரஜினிகாந்த் ட்வீட்!
October 20, 2023 / 10:49 AM IST
|Follow Us
பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் டைகர் ஷெராஃப். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆக்ஷன் படம் ‘கண்பத்’. இப்படம் இன்று (அக்டோபர் 20-ஆம் தேதி) ஹிந்தி மொழி மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை இயக்குநர் விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ளார். இதில் டைகர் ஷெராஃப்புக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அமிதாப் பச்சன், ரகுமான், கிரீஸ் குல்கர்னி, ஸ்ருதி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் பாடல்களுக்கு விஷால் மிஸ்ரா, அமித் த்ரிவேதி, வொயிட் நாய்ஸ் ஸ்டுடியோஸ், Dr.ஜீயஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர், சலீம் சுலைமான் பின்னணி இசையமைத்துள்ளார். தற்போது, கோலிவுட்டின் டாப் ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று டைகர் ஷெராஃப்புக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.