கவர்ச்சி போஸ் கொடுத்த ‘கங்குவா’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோஸ்!
October 21, 2023 / 06:12 PM IST
|Follow Us
பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் திஷா பதானி. இப்போது இவர் நடிப்பில் ஹிந்தியில் ‘யோதா’, தெலுங்கில் ‘கல்கி 2898 AD’, தமிழில் ‘கங்குவா’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘கங்குவா’ படத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கி வருகிறார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இதற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட GLIMPSE படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை திஷா பதானி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.