‘சூர்யா 43’ஐ இயக்கும் சுதா கொங்கரா… வைரலாகும் அறிவிப்பு வீடியோ!
October 27, 2023 / 02:01 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், சூர்யாவின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை சூர்யாவே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
இதில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கவிருக்கிறார்கள். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவிருக்கிறார்.