Japan Movie Review: கார்த்தி – ராஜு முருகன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
November 10, 2023 / 02:49 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘ஜப்பான்’, ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘ஜப்பான்’ படம் இன்று (நவம்பர் 10-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராஜு முருகன் இயக்கியுள்ளார்.
இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சுனில், விஜய் மில்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கார்த்தியின் கேரியரில் 25-வது படமாம். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Joker Movie director nu Nalla Irukum nu nenaicha , Eppotha theriyudhu Gepsy uhm Evan adutha padam nu #Japan
#Japan – Good Story, Characterization for Hero.. Dialogs are Good அங்கங்க.. Screenplay, Scenes, Making தான் பொறுமைய சோதிச்சிடுச்சு.. அந்த Novel Style Climax அ வெச்சே எப்டியும் இத Family Audience தலைல கட்டிடுவாங்க..