Nayanthara & Vignesh Shivan : நயன்தாராவுக்கு பர்த்டே கிஃப்ட்டாக விக்னேஷ் சிவன் கொடுத்த காரின் விலை இத்தனை கோடியா?
November 30, 2023 / 08:47 PM IST
|Follow Us
தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘மண்ணாங்கட்டி Since 1960, அன்னபூரணி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘அன்னபூரணி’ படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் நயன்தாராவின் கேரியரில் 75-வது படமாம். இந்த படத்தை நாளை (டிசம்பர் 1-ஆம் தேதி) ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பின், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 18-ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு பர்த்டே கிஃப்ட்டாக ரூ.3 கோடி மதிப்புள்ள Mercedes Maybach காரை கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.