Vikram & Pa.Ranjith : ‘தங்கலான்’ இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு விக்ரம் கொடுத்த பர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா?
December 9, 2023 / 11:35 AM IST
|Follow Us
சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘தங்கலான்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்குகிறாராம். நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம். இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
இதில் பார்வதி, மாளவிகா மோகனன் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், மிக முக்கிய ரோல்களில் பசுபதி, டேனியல் கால்டாகிரோன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று இயக்குநர் பா.இரஞ்சித்தின் பர்த்டே என்பதால், நடிகர் விக்ரம் அவரை நேரில் சந்தித்து கூலிங் கிளாஸ் ஒன்றை கிஃப்ட்டாக கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.