Rakul Preet Singh & Jackky Bhagnani : வைரலாகும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் – நடிகர் ஜாக்கி பக்னானியின் திருமண புகைப்படங்கள்!
February 22, 2024 / 12:00 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் டூயட் பாடிய ரகுல் ப்ரீத் சிங், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்பத்தில் நடித்த ‘புத்தகம், என்னமோ ஏதோ’ போன்ற தமிழ் படங்கள் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பெரிதாக க்ளிக் ஆகவில்லை.
அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ மற்றும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய இரண்டு படங்களும் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்புக்கு கோலிவுட் ஆடியன்ஸை லைக்ஸ் போட வைத்தது. இவ்விரண்டு படங்களுக்கு பிறகு ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தேவ், NGK, அயலான்’ என தமிழ் படங்கள் குவிந்தது. ரகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஹிந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.