முதல்முறையாக விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் இம்மாதம் 9ம் தேதி ரிலீசாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் கொரோனாவால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பெருமளவு பணம் போட்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாததால் வினியோகஸ்தர்கள் விஜய் தரப்பினரிடம் பணத்தை திரும்ப கொடுக்கும் படி முரண்டு பிடித்தனர். ஆனால் படம் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்த தயாரிப்பு நிறுவனம், அதற்காக என்ன செய்யலாம் என குழம்பிக்கொண்டிருந்தது.
அமேசானில் நேரடியாக படத்தை வெளியிடலாமா என யோசித்த நிலையில், படம் அமேசானில் வெளியான சில நொடிகளில் இணையத்தில் திருட்டு காப்பி வெளியாகி விடும் என பயந்த படக்குழு அந்த திட்டத்தை கைவிட்டது. இந்நிலையில் மே3க்கு பின் லாக்டவுன் முடிவுக்கு வரும் என்று நம்பப்படுவதால், படத்தை 5 மொழிகளில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. இதனால் வசூலும் பெருமளவு வரும் என நம்பப்படுகிறது. இதன்படி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் படம் ரிலீசாகவுள்ளது.
ஆனால் லாக்டவுன் எப்போது முடியும் என்பது தான் யாரும் தெரியவில்லை. முடிந்தாலும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படுமா என்பது சந்தேகம் தான்.