திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸுகளின் உலகம் என்று அழைக்கப்படும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தற்போது வசூலை வாரி குவித்து வருகிறது.
அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பியா, ஆசிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்தியா முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. வீட்டுக்குள்ளேயே அனைவரும் முடங்கியுள்ளதால் டிவி, செல்போன் போன்றவற்றில் அதிகமாக பொழுதை கழித்து வருகின்றனர். குறிப்பாக அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் ஆகிய ஆன்லைன் ஸ்டிரிமீங் இணையதங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த 3 மாதத்தில் பல கோடி பேர் வாடிக்கையாளர்களாக மாறி வருவதால், அந்நிறுவனங்கள் பெருமளவு வருவாயை ஈட்டு வருகின்றன. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தில் மட்டும் சுமார் 5,388 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸின் ஒட்டுமொத்த வருமானம் 32 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சினிமாக்கள் மட்டுமல்லாமல், வெப்சீரிஸ், டாக்குமென்டரி, ரியாலிட்டி ஷோ என அனைத்தும் இதில் கிடைப்பதால் ஏராளமானோர் இத்தளத்தை விரும்பி பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.