கோலிவுட் பிரின்ஸ் சிவகார்த்திகேயன் #WeLoveDoctors என்ற ஹேஷ்டாக்குடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.கோலிவுட்டின் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் சிவகார்த்திகேயன், முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் முதல் நடிகராக இந்த தொகையை அவர் அறிவித்ததாகவும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லாருக்கும் வணக்கம், நான் சிவகார்த்திகேயன் பேசுறேன். இன்னும் கொஞ்சம் காலம். நம் விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் ஊரடங்கும் கொரோனா பிரச்னையும் விரைவில் முடிந்துவிடும் என நம்புகிறேன். வீட்டிலே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். பெரியவர்களையும் குழந்தைகளையும் பத்திரமா பாத்துக்கொங்க… நமக்காக வெளியில் உழைத்துக்கொண்டிருக்கிற அரசு, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.