“அய்யயோ! இந்த கூட்டணி போதும்டா சாமி” என்று ரசிகர்கள் புலம்பிய ஹீரோ & இயக்குனர் கூட்டணி! இந்த கூட்டணியில் இனிமேல் படமே வேண்டாம் என்று ரசிகர் கெஞ்சும் கூட்டணி.!
தமிழ் சினிமாவில் கூட்டணியாக உருவாகும் படங்கள் ஏராளம். ஹீரோ இயக்குனர் கூட்டணி, ஹீரோ ஹீரோயின் கூட்டணி, ஹீரோ தயாரிப்பாளர் கூட்டணி என்று நிறைய கூட்டணிகளில் படங்கள் வந்துள்ளது. அதில் ஹிட்டான கூட்டணி எது, தோல்வியடைந்த கூட்டணி எது என்று பார்க்கலாம்.
அஜித் – சரண் :
“காதல் மன்னன்” திரைப்படத்தில் ஆரம்பித்த வெற்றி கூட்டணியான சரண் அஜித் கூட்டணி அதன் பின்னர் அமர்க்களம், அட்டகாசம் என்று தங்களது வெற்றியை தொடர்ந்து கொண்டே சென்றனர். ஆனால் இந்த வெற்றி தொடரை “அசல்” என்ற ஒற்றை படம் சுக்கு நூறாக உடைத்தது.
சூர்யா – கே வி ஆனந்த்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான அயன் திரைப்படம் பெரும் வெற்றியை அடைந்தது. அதன் பின்னர் இருவரும் “மாற்றான்” திரைப்படத்தில் ஒன்று சேர்ந்தனர். ஆனால் அப்படம் பெரும் தோல்வியை தழுவியது. தங்களது கூட்டணியின் பலத்தை காட்டியே ஆகா வேண்டு என்று மீண்டும் முன்றாவது முறை “காப்பான்” திரைப்படத்திற்காக ஒன்று சேர்ந்தனர். அனால் இப்படம் மாற்றானை விட மோசமான தோல்வியை தழுவியது.
விஜய் – பிரபுதேவா
விஜய் – பிரபுதேவா கூட்டணியில் உருவான திரைப்படம் போக்கிரி. இந்த படம் மிக பெரிய வெற்றியை அடைந்தது. போக்கிரியின் வெற்றியை தொடர்ந்து “வில்லு” என்ற படத்தில் மீண்டும் இணைந்தனர். மிக பெரிய எதிர்பார்ப்பியுடன் வெளியான வில்லு திரையிடப்பட்ட வேகத்தில் திரையரங்குகளிலிருந்து வெளியேறியது தான் மிச்சம்.
ரஜினி – சுரேஷ் கிருஷ்ணா
சின்ன குழந்தை முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படம் என்றால் கண்டிப்பாக அது “பாட்ஷா”வாக தான் இருக்கும். ரஜினி சுரேஷ் கிருஷ்ணாவின் கூட்டணியில் உருவான பாட்ஷா திரைப்படம் சக்கைப்போடு போட்டது. ரஜினியின் 150வது படத்தில் மீண்டும் இணைந்த இந்த கூட்டணியின் மீது மக்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அனால் வழக்கம் போல் ஏன் எதிர்பார்த்தோம் என்று மக்கள் நொந்து போயினர். அந்த அளவுக்கு படம் சுமாராகவே இருந்தது.