முதலமைச்சரின் ஊரில் இலங்கை அகதிகளுக்கு உதவிய விஷால்
May 15, 2020 / 11:56 AM IST
|Follow Us
முதலமைச்சரின் சொந்த ஊரான சேலத்தில் சிக்கித் தவித்த இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.திரையுலக பிரபலங்கள் பலரும் மக்களுக்கு பல்வேறு விதங்களில் உதவி வருகின்றனர். நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலும் தனது தேவி அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் முகாம்களில் இலங்கை தமிழர்கள் 300குடும்பங்களுக்கு மேல் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட அவர்களுக்கு நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை முலம் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினார். @VishalKOfficial @HarikrOfficial pic.twitter.com/0zkf8Y0W8z
சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் என்ற ஊரில் உள்ள முகாமில் 300-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உண்ண உணவில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.இதனையறிந்த விஷால் உடனே தன்னுடைய தேவி அறக்கட்டளையின் மூலமாக அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை அளித்துள்ளார். இந்த உதவியை தன்னுடைய மேனேஜர் ஹரி கிருஷ்ணா மூலமாக செய்துள்ளார்.உதவியைப் பெற்றுக் கொண்ட இலங்கை அகதிகள் விஷாலுக்கு நன்றி கூறி உள்ளனர்.