நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்திருக்கும் டாக்டர் திரைப்படம் குறித்த அப்டேட்டை செய்தி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
சின்னத்திரையின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். மெரீனா தொடர்ந்து பல படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கென்று தனி அடையாளம் தந்த படம் எதிர்நீச்சல்.
ஆர்ப்பரிக்கும் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் ஹீரோவாக தன்னை பதிவு செய்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் வசூல் சக்கரவர்த்தியாக மாறினார்.
தொடர் வெற்றி தோல்விகளை சந்தித்து வந்தாலும் ரசிகர்களின் மனதில் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்றன.
தற்போது ‘அயலான்’, ‘டாக்டர்’ என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து எந்த அறிவிப்பும் வராத நிலையில், சிவாவின் ‘டாக்டர்’ திரைப்படம் அயலான் திரைப்படத்திற்கு முன்பே வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டாக்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ‘டாக்டர்’ திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனையறிந்த சிவாவின் ரசிகர்கள் படுகுஷியாகியுள்ளனர்.
கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும் இணைந்து ‘டாக்டர்’ திரைப்படத்தை தயாரிக்கின்றன.
இப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு என பலர் நடிக்கின்றனர். மேலும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருப்பது பலரது வரேவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.