நடிகை சாயா சிங் நடித்த திருடா திருடி படத்தில் உள்ள மன்மத ராசா பாடலுக்கு தற்போது டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது பிறந்தநாளை முன்னிட்டு மன்மத ராசா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயா சிங்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 1981 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தவர் நடிகை சாயா சிங். இவரது பெற்றோர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சாயா சிங் பிறப்பதற்கு முன்னதாக அவர்கள் பெங்களூருவிற்கு குடியேறினர்.
ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த சாயா சிங், பெங்களூருவில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.கடந்த 2000 ஆம் ஆண்டில் கன்னடத்தில் வந்த முன்னாடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். வரிசையாக கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்தார்.
அப்போதுதான், 2003 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் திரைக்கு வந்த திருடா திருடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அதிகளவில் பிரபலமானார்.இந்தப் படத்தில் வரும் மன்மத ராசா பாடலுக்கு இவரது நடனம் இன்றும் ரசிகர்களை கவரும் வகையிலேயே இருக்கிறது.
அதன் பிறகு சியான் விக்ரம் நடித்த அருள் படத்தில் வரும் மருதமலை அடிவாரம் என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியிருப்பார்.இதே போன்று தளபதி விஜய் நடிப்பில் வந்த திருப்பாச்சி படத்தில் இடம்பெற்றுள்ள கும்புட போன தெய்வம் என்ற பாடலுக்கு சாமி ஆட்டம் ஆடியிருப்பார்.
எந்தவித கவர்ச்சியும், கிளாமரும் இல்லாதமலும் தனது சிறப்பான நடிப்பை மட்டும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்.அண்மையில், விஷால், தமன்னா நடிப்பில் வந்த ஆக்ஷன் படத்தில் குணச்சித்திர ரோலில் நடித்துள்ளார்.
https://www.instagram.com/p/CAS96WmhqNc/
தமிழ், மலையாளம, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், கன்னடத்தில் வந்த நந்தினி 2 என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.சினிமாவில் பிஸியாக நடித்து வந்த சாயா சிங், கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 16 ஆம் தேதி சாயா சிங் தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து, நடிகர் சிவசங்கர் மாஸ்டர் உடன் இணைந்து தனது மன்மத ராசா பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.