• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சர்ச்சை நாயகி மிராமிதுனுக்கு விரைவில் திருமணம்… சிக்கியது யாரோ..!!!

சர்ச்சை நாயகி மிராமிதுனுக்கு விரைவில் திருமணம்… சிக்கியது யாரோ..!!!

  • June 2, 2020 / 11:17 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சர்ச்சை நாயகி மிராமிதுனுக்கு விரைவில் திருமணம்… சிக்கியது யாரோ..!!!

கோலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த மீரா மிதுன் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் இனி நடிக்கப் போவதாக கூறினார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த பிறகு மீரா மிதுன் ட்விட்டரில் படு ஆக்டிவாக உள்ளார். தொடர்ந்து தனது புகைப்படங்கள், டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

மீரா என்ன ட்வீட் போட்டாலும் அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதை மீரா மிதுன் பெரும்பாலும் கண்டு கொள்வது இல்லை. ஆனால் சில நேரம் கடுப்பாகி விளாசிவிடுவார். மேலும் அண்மையில் மீராவின் மார்ஃபிங் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யப் போவதாகவும் மீரா அவ்வப்போது கூறி வருகிறார். அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபிக்களை ட்விட்டரில் வெளியிட அதை பார்த்தவர்களோ மீரா அண்ணன் கட்சியில் தான் சேரப் போகிறார் போன்று என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் மீரா தான் மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்தவர்கள், என்ன மீரா கல்யாணமாகப் போகிறதா, சொல்லவே இல்லை என்று தெரிவித்தனர். இது குறித்து மீரா டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியதாவது, எனக்கும், என் காதலருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. நான் பிற சாதாரண பெண்களை போன்று சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பு நான் இந்த அளவுக்கு சந்தோஷப்பட்டது இல்லை. எனக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் என் வருங்கால கணவர் யார், அவர் என்ன செய்கிறார் என்கிற விபரங்களை தெரிவிக்க நான் விரும்பவில்லை.

என் திருமணம் நடக்கும் வரை அவரை பற்றிய விபரங்களை வெளியிட மாட்டேன். லாக்டவுனால் கிடைத்த பிரேக் என் வாழ்வில் சிறந்த நாட்களாகிவிட்டது. வேலை, புகழ், அதிகாரம் என்று ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் என் தனிப்பட்ட வாழ்க்கை காணாமல் போய்விட்டது. இந்த லாக்டவுனில் தான் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் கிடைத்தது என்றார். மீராவுக்கு இப்படி சத்தமில்லாமல் நிச்சயதார்த்தம் நடந்திருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் வியப்பாக இருக்கும். மீரா யாரை திருமணம் செய்யப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். இது மீராவுக்கும் தெரியும். இருப்பினும் வருங்கால கணவர் யார் என்பதை சொல்ல மறுக்கிறார். மீராவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்களும், சமூக வலைதளவாசிகளும் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு. அவர்கள் சந்தேகப்பட்டது போன்றே மீராவுக்கு திருமணம் நடக்கப் போகிறது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளம் தனக்கு கொடுக்கப்படவில்லை என்று மீரா தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார். மேலும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் அண்மை காலமாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீரா மிதுன் திருமதி ஆக தயாராகி வருகிறார். மாட்னது யார் என்று இதுவரை தெரியவில்லை..!

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Meera Mithun

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தப்பி ஓடிய மீரா மிதுன்… ‘பேய காணோம்’ படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் உண்மையை போட்டுடைத்த இயக்குநர்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தப்பி ஓடிய மீரா மிதுன்… ‘பேய காணோம்’ படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் உண்மையை போட்டுடைத்த இயக்குநர்!

நிபந்தனை ஜாமீன்… புழல் சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை மீரா மிதுன்!

நிபந்தனை ஜாமீன்… புழல் சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை மீரா மிதுன்!

ஜாமீன் கேட்ட நடிகை மீரா மிதுன்… அதிரடி தீர்ப்பு வழங்கிய முதன்மை அமர்வு நீதிமன்றம்!

ஜாமீன் கேட்ட நடிகை மீரா மிதுன்… அதிரடி தீர்ப்பு வழங்கிய முதன்மை அமர்வு நீதிமன்றம்!

போலீசார் கைது செய்வதற்கு முன்பு கதறி அழுத மீரா மிதுன்… வைரலாகும் வீடியோ!

போலீசார் கைது செய்வதற்கு முன்பு கதறி அழுத மீரா மிதுன்… வைரலாகும் வீடியோ!

இது நம்ம ரைசா வில்சனா, இல்ல மீரா மிதுனா?… கன்ஃப்யூஸ் ஆன ரசிகர்கள்!

இது நம்ம ரைசா வில்சனா, இல்ல மீரா மிதுனா?… கன்ஃப்யூஸ் ஆன ரசிகர்கள்!

விஜய் – சூர்யா குறித்து அவதூறு பேச்சு… மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்!

விஜய் – சூர்யா குறித்து அவதூறு பேச்சு… மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

19 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

19 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

19 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

19 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

19 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version