காவியக்காதல், இன்று நேற்று நாளை, வெற்றிவேல் ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை மியா ஜார்ஜுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

மியாவை திருமணம் செய்யவுள்ள அஸ்வின் வீட்டில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டார்களாம். நிச்சயதார்த்த தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாம். லாக்டவுனால் நிச்சயதார்த்ததை தள்ளி வைக்க மனம் இல்லாமல் சத்தமில்லாமல் நடத்தினார்களாம்.

மியா, அஸ்வின் திருமணத்தை வரும் செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மியாவுக்கு வரும் செப்டம்பர் மாதம் திருமணம் என இன்று தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்து செய்தித்தாளை திறந்தாலே பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் இந்த திருமண செய்திகள் கொஞ்சம் ஆறுதலாக உள்ளது என்று சினிமா ரசிகர்கள் கூறியுள்ளனர். மியா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
