பிரபல இந்தி திரைப்பட நடிகையான கங்கனா ரனாவத் நடித்து உருவாக்கப்பட்ட, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகருமான ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாகவிருந்தது. இந்தத் திரைப்படம் ott தளத்தில் வெளியிடப்படுவதாக தகவல்கள் வந்தது.
இதைப்பற்றி கங்கனா ரனாவத் தனது பேட்டியில் கூறியதாவது” இந்த திரைப்படம் இரண்டு பெரிய ott தளங்களுக்கு விற்கப்பட்டது உண்மை. ஆயினும் இத்திரைப்படம் வெள்ளித்திரையில் வருவதற்கான அனைத்து தகுதிகளையும் பிரம்மாண்டத்தையும் கொண்டுள்ளது. அதனால் இப்படம் ott யில் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு” என்று கூறியுள்ளார். இவர் தமிழில் இதற்கு முன்னர் நடிகர் ஜெயம்ரவியுடன் இணைந்து தாம்தூம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தலைவி திரைப்படம் இயக்குனர் விஜய் இயக்க நடிகர் அரவிந்த்சாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகருமான MGR அவர்களின் வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் விஷ்ணுவர்தன், இந்தூரி மற்றும் சைலேஷ் R சிங் அவர்களின் தயாரிப்பில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று உறுதியாகியுள்ளது.