இந்த லாக் டவுனில் பல திரைப்பட பிரபலங்களின் கல்யாண செய்தி குறித்து வதந்திகள் வந்த நிலையில் ,அதில் அடுத்து சிக்கியுள்ளவர் ,பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளார் என்று செய்திகள் வந்தன.
இந்த செய்தி குறித்து ஹன்சிகா மோத்வானி உடனடியாக பதில் அளித்துள்ளார். அவர் டிவிட்டர் பக்கத்தில்” இந்த செய்தி முற்றிலுமான ஒரு வதந்தி, மேலும் யார் அந்த தொழிலதிபர்!?” என்று பதிவிட்டுள்ளார். இந்த செய்தி குறித்து அவரது நண்பர் ஒருவர் ஏன் எங்களுக்கும் திருமணம் பற்றி கூறவில்லை என்று கேட்டதற்கு, ‘தனக்கே இப்போதுதான் தெரியும்’ என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.
இந்த லாக்டவுன் காலத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்களை செய்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வரும் ஹன்சிகா , கடந்த ஏப்ரல் மாதம் யூடியூபில் தனி சேனல் தொடங்கி தனது அன்றாட வாழ்வு பற்றி பதிவிட்டு வருகிறார். அதில் சில வீடியோக்கள் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ஹன்சிகா மோத்வானி அவரது அடுத்த படமான “மாகா”வில் நடித்துள்ளார். லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. யூ .ஆர்.ஜமீல் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்தப் படம் ஹன்சிகா மோத்வானிக்கு 50வது திரைப்படமாகும். இந்தப் படத்தில் ஹன்சிகாவுக்கு ஜோடியாக நடிகர் சிம்பு நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, ஸ்ரீகாந்த் ,கருணாகரன் ,நாசர், ஜெயப்பிரகாஷ், சாயாசிங் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.