தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கேத்ரின்தெரசா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்த கொரோனா லாக்டவுனில் கேத்ரின் தனது பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார் .அதை தொடர்ந்து இவர் சமைப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ,அந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.
துபாயில் பிறந்த இவர், அங்கேயே தன் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு கல்லூரி படிப்புக்காக பெங்களூர் வந்த இவர் ,நடனம் ,பாடல் ,ஐஸ் ஸ்கேட்டிங் என தன் திறமைகளை வளர்த்துக் கொண்டார். 14 வயதிலேயே சில உள்ளூர் பத்திரிகைகளுக்கு மாடலிங் செய்துள்ளார்.
பின்பு நல்லி சில்க்ஸ் ,சென்னை சில்க்ஸ், பாஸ்ட் ட்ராக், ஜோஸ்கோ ஜூவல்லர்ஸ் போன்ற பல நிறுவனங்களுக்கு மாடலிங் செய்துள்ளார். 2010 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட படமான “ஷங்கர் ஐபிஎஸ் “படத்தில் நடிகர் துனியா விஜய்யுடன் இணைத்து தன் நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
தமிழில் மெட்ராஸ், கதக்களி, கலகலப்பு2 ஆகிய படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே நீங்காத இடம் பிடித்தவர், நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் “வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்”.
கே .ஏ .வல்லபா தயாரிப்பில் உருவான இந்த படத்தில், இவருடன் விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷ் ,ராசி கண்ணா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கிராந்தி மாதவ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கோபி சுந்தர் இசையமைத்திருந்தார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.