பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஜெ.சதீஷ்குமார், தனது சமீபத்திய அறிக்கையில் அவரது தயாரிப்பில் உருவான மூன்று படங்களை OTT தளத்தில் வெளியிடப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதைப்பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆண்டாவ காணோம்” , “வாடீல்” மற்றும் “மம்மி சேவ் மீ” ஆகிய படங்கள் OTT தளத்தில் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். ஷெரேயா ரெட்டி நடிப்பில் அண்டாவ காணோம் மற்றும் பிரியங்கா உபேந்திரா நடிப்பில் மம்மி சேவ் மீ ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிவஞானம் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் இந்த வருடங்களில் வெளிவரவிருந்த திரைப்படம் “வா டீல் ” என்பது குறிப்பிடத்தக்கது.
சதீஷ் குமார் அடுத்து ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியாகவிருக்கும் “பிரெண்ட்ஷிப்” என்ற படத்திலும், இயக்குனர் நவீன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “அக்னிசிறகுகள்” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த லாக்டவுன் தொடங்கிய சில காலத்தில் ,இவர் தனது ட்விட்டரில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொண்டால் உதவிகரமாக இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் தயாரிப்பாளர்கள் வாங்கியிருக்கும் கடன் வட்டியை மூன்று மாதங்கள் தள்ளுபடி செய்யவும் கேட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் மற்றும் இயக்குனர் ஹரி தங்களது சம்பளத்தை குறைத்து கொண்டார்கள்.
சமீபத்தில் OTT தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பொன்மகள்வந்தாள்’ படத்தை தொடர்ந்து அடுத்து, ‘பெண்குயின் ‘திரைப்படம் OTTதளத்தில் வெளிவரவிருக்கிறது. இப்பொழுது இந்த மூன்று படங்கள் வெளிவரவிருப்பதாக சதீஷ் குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் ஜே .சதீஷ்குமார் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில்” ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்ஸ் தயாரிப்பில் “அண்டாவ காணோம்”, “வா டீல் ” மற்றும் “மம்மி சேவ் மீ”ஆகிய படங்கள் OTT தளத்தில் விரைவில்வெளியாகும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மூன்று புதிய படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதன் படக்குழு மற்றும் நடிகர்கள் பற்றிய விபரம் விரைவில் வெளியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பல படங்கள் OTT தளத்தில் வெளியாகி வரும் நிலையில்,திரையரங்குகளின் நிலை என்ன ஆகும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.