தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றவர்.
இவர் தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பின்பு ஹீரோயினாக “பானா காத்தாடி” படத்தின் மூலம் திரைப்படவுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர், நான் ஈ , நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தங்கமகன் ,தெரி, 24, மெர்சல் ,சூப்பர் டீலக்ஸ் என்று வரிசையாக பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் தமிழில் விஜய், சூர்யா ,விக்ரம், ஜீவா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளது மட்டுமின்றி தெலுங்கிலும் பல நட்சத்திர நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.
இவர் கடைசியாக நடித்து தமிழில் வெளிவந்த திரைப்படம்” சூப்பர் டீலக்ஸ்”. தியாகராஜா குமார் ராஜா இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று தந்தது. தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும்” காத்துவாக்குல இரண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.
https://www.instagram.com/p/CBYEmUUhEzy/
ஊரடங்கில் தன் கணவர் நாகசைதன்யாவுடன் நாட்களை செலவிட்டு வரும் சமந்தா , பல புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதில் கடைசியாக அவர் தோட்டக்கலையில் ஈடுபட்டு வருவது போன்ற புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார், அது தற்போது வைரலாகி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.