தமிழ் திரைப்படவுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு, பிரபல இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் டி .ஆர் ராஜேந்தரின் மூத்த மகன் ஆவார். சிம்பு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து, 2002ல் வெளியான “காதல் அழிவதில்லை” படத்தின் மூலம் நடிகராக தன் திரைப்பயணத்தை தொடங்கினார்.
இவர் நடிப்பதில் மட்டுமல்லாமல் இயக்கம், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல ரூபங்களை சினிமாவில் எடுத்துள்ளார்.
காதல் அழிவதில்லை படத்தில் ஆரம்பித்த இவரது ஹீரோ பயணம் , கோவில், மன்மதன், சரவணா, வல்லவன், தொட்டி ஜெயா, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நீங்காத இடம் பிடித்தார்.
சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த குறும்படமான “கார்த்திக் டயல் செய்த எண்ணில் ” நடித்துள்ளார். இணையதளத்தில் அந்த குறும்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதையடுத்து யூ.ஆர்.ஜமீல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “மகா” படத்தில் ஒரு கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “மாநாடு” படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து “STR 45” படத்தின் படப்பிடிப்பு இந்த லாக் டவுனுக்கு முன்னர் நடந்துகொண்டிருந்தது. இயக்குனர் நார்தன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்த படம் கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த “மவ்ஃடி”திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லாக்டவுன் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று திரைப்பட வட்டாரம் தெரிவிக்கின்றது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.