புகழ்பெற்ற பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் இன்று காலமானார். இவர் மனைவி எம்.என். ராஜம் புகழ்பெற்ற நடிகையாவார்.ஏ.எல்.ராஜனின் குரல் பட்டிதொட்டியெங்கும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த அய்யம்பேட்டை லட்சுமணன் ராகவன் பாடகர் மட்டுமல்லாது சிறந்த நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார்.
பன்முக திறமைகளை கொண்ட இவர் ஆரம்பக் காலங்களில் மேடைகளில் ராஜ்பாட் வேடமிட்டு நடித்தால்,நம் எம்ஜிஆர்தான் பெண் வேடமிட்டு இவருக்கு ஜோடியாக நடிப்பாராம். இவர் மிருதங்கம், வயலின் போன்ற கருவிகளையும் நன்றாக இசைப்பாராம்.
ஆரம்ப காலகட்டத்தில் பெண் குரல் போல தோன்றியது இவர் குரல், இருப்பினும் மனம் தளராமல் அதே குரலில் பாடலை பாடி வந்த இவர், தன் விடாமுயற்சியால் எம்எஸ்.வி யிடம் பாடும் வாய்ப்பை எட்டினார். “புதையல்” என்னும் படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து “ஹலோ மை டியர் ராமி”என்ற பாடலை பாடினார். இதுதான் அவர் ஆண் குரலில் பாடிய முதல் பாடல், இதன்பின் இவரது பாடல் பட்டிதொட்டியெங்கும் கேட்கப்ப்பட்டது.
இவர் காலகட்டத்தில் டிஎம்எஸ், சீர்காழி என்று இரு பெரும் ஜாம்பவான்கள் இருந்தாலும், இவரது இனிமையான குரல் இவர்களுக்கு நடுவில் எப்போதும் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. வெஸ்டன் பாடல், கலாட்டா பாடல் போன்ற பாடல் என்றாலே ராகவன் தான் அப்பொழுது முன்னுரிமை கொடுக்கப்பட்டார்.
அந்த காலகட்டத்தில் எல்.ஆர் ஈஸ்வரியேடன் இணைந்து மேடை ஆர்கெஸ்ட்ராக்களை தொடங்கியதும் ஏ.எல்.ராகவன் தானாம். இந்த ஜோடிக் குரலில் பல வெற்றிப் பாடல்கள் வந்த நிலையில் இந்த ஆர்கெஸ்ட்ராவும் வெற்றி பெற்றது.
“எங்கிருந்தாலும் வாழ்க” என்ற பாடலை இவர்தான் பாடியுள்ளார். இதைப்போல பல கருத்துள்ள பாடல்களையும், இனிமையான பாடல்களையும் நமக்கு தந்த ஏ.எல். ராகவன் தற்போது நம்மை விட்டு சென்றாலும், அவர் கொடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் நம்மோடு எப்போதும் இருக்கும்.