மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் திரைப்படவுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் படத்தை அடுத்து “கைதி” என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார் .இந்த படத்தில் நடிகர் கார்த்தி நடித்திருப்பார். இந்த படம் பட்டி தொட்டி எங்கும் பரவி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த வெற்றிப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் வைத்து “மாஸ்டர்” படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது இந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து படம் இயக்கவிருப்பதாக செய்திகள் வந்தது. ஆனால் இன்னும் அந்த படம் பற்றிய முழுமையான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.2021 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.
இதைத்தொடர்ந்து ட்ரீம் வாரியர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், இந்தப் படம் கைதி படத்தின் சீக்குவலாக இருக்கலாம் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் கைதி 2 விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.