லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “பட்டம் போலே” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் மாளவிகா.இதை தொடர்ந்து இவர் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்த பின்பு, சென்ற வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான” பேட்ட”படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தெலுங்கிலும்” ஹீரோ” என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களோடு நடித்துவரும் மாளவிகா மோகனனுக்கு படவாய்ப்புகள் ஏராளமாக வருகிறதாம்.
டோலிவுட்டில் இருந்து அவருக்கு சமீபத்தில் வந்த பட வாய்ப்பை வேண்டாம் என்று கூறும் அளவிற்கு படவாய்ப்புகள் குவிகிறது அவருக்கு. ஸ்ரீதேவி கபூர் நடிப்பில் வெளியான “மாம்” திரைப்படத்தின் இயக்குனர் ரவி உதாய்வர் தற்போது அவரது அடுத்த ஹிந்திப் படத்திற்காக இவரை அணுகியுள்ளார் என்று திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.
இதில் நடிகர் சித்தான்த் சதுர்வேதி ஜோடியாக மாளவிகா இந்த படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் மாளவிகாவுக்கு மிகவும் பவர்ஃபுல்லான ரோல் என்றும் படத்தைப் பற்றிய முழு விவரம் விரைவில் வெளியாகும் என்றும் செய்தி வந்துள்ளது.
சினிமா துறைக்கு வந்த சில காலங்களிலேயே மாளவிகா மோகனன் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பட வாய்ப்புகள் அவருக்கு குவிகிறது என்பது சிறப்பம்சம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.