கொரோனா தடுப்பு பணியில் நடிகர் அஜித்தின் யோசனையை பின்பற்றும் அரசு..!
June 25, 2020 / 03:01 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித், தன் திறமையான நடிப்பின் மூலமும், நல்ல குணங்களைப் பின்பற்றுவதன் மூலமும் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்தவர். இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் “வலிமை” என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சினிமா படப்பிடிப்புகள் மற்றும் இதர வேலைகள் இந்த சூழ்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா லாக்டவுன் முடிந்ததும் இந்த “வலிமை” திரைப்படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில சினிமா பிரபலங்கள் உதவி வருகிறார்கள். இதில் நமது தல அஜித்தும் ஒருவராவார். இவர் உதவி செய்கிறார் என்பது பலருக்கும் தெரியாத வகையில் செய்துவருகிறார் என்று அவரது ரசிகர்கள் கூறிவந்த நிலையில், “தாக்சா” என்ற அமைப்பு கொரோனா வேலைகளை மேற்பார்வையிட ஹெலிகேம்களைத் தயாரித்து வருவதாகவும், இதில் நடிகர் அஜித்தின் பங்களிப்பு பெருமளவில் உள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.
இந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவரே இந்த தகவலை முன்வந்து கூறி, இதை உறுதிப்படுத்தியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் வெளிப்படையாக உதவிகளை செய்து வரும் நிலையில் யாருக்கும் தெரியாமல் நடிகர் அஜித் உதவிகளை செய்து வருவது பாராட்டுக்குரியது.