கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து சினிமா பிரபலங்களும் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்காக யோகா, உடற்பயிற்சி, நடனம் என ஏதாவது ஒன்றை செய்து வருகிறார்கள்.
இதில் நமது க்யூட் நடிகையான சமந்தா அக்கினேனியும் ஒருவராவார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சமந்தா ருத் பிரபு. பின் “பானா காத்தாடி” படத்தின் மூலம் நடிகையாக தன் திரையுலக பயணத்தை தொடங்கினார்.
அதன்பின்னர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து பிரபலமான இவர் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழில் விஜய்,சூர்யா,விஷால்,தனுஷ் விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்து தமிழில் வெளிவந்த திரைப்படம் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான “சூப்பர் டீலக்ஸ்” ஆகும்.
இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்துவாக்குல ரெண்டு காதல்” எனும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்ததும் தொடங்கும் என்று திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.
இவர் 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஊரடங்கில் தன் கணவருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமந்தா தோட்டக்கலை, சமையல், யோகா, உடற்பயிற்சி என அனைத்தையும் இந்த லாக்டவுனில் செய்துவருகிறார்.
அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பதிவுகள் முழுவதிலும் இந்த புகைப்படங்கள் குவிந்துள்ளது. அவர் தற்போது ஒரு சூப்பரான “யோகா போஸ்” செய்வது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அது அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் குறிப்பிட்டதாவது” தோட்டக்கலையை தாண்டி, என்னை லாக்டவுனில் புதிதாய் கவர்ந்துள்ள விஷயம் யோகா. குறிப்பாக அதை நான் நாக சைதன்யாவுடன் சேர்ந்து செய்வதால் மிகவும் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது சகோதரர்களுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் சமந்தா ஆக்டிவாக இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.