உலகநாயகன் கமல்ஹாசனின் அண்ணனான சாருஹாசன் 1979ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “உதிரிப்பூக்கள்”படத்தில் தன் நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
இவர் குணச்சித்திர நடிகராக சுமார் 120 படங்களுக்கு மேல் நடித்திருப்பார். இவர் நடிப்பில் வெளிவந்த வேதம் புதிது மற்றும் தளபதி ஆகிய படங்கள் தமிழில் குறிப்பிடத்தக்கவை. 1987-ம் வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த கன்னட படம் “தபாரான காதே”. இதில் தன் நடிப்புத் திறமைக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
இவர் தமிழில் ரஜினி,கமல்,விஜய், அஜித் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு விஜய் ஸ்ரீ.ஜி இயக்கத்தில் வெளிவந்த “தா தா 87” படத்தில் டான் வேடத்தில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து மீண்டும் விஜய் ஸ்ரீ.ஜி இயக்கத்தில் சாருஹாசன், அவரது அடுத்த படத்தில் டானாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், மார்ச் மாதத்தில் சுமார் ஏழு நாட்கள் சாருஹாசனுடன் இவர் பணிபுரிந்ததாகவும் இந்த படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
அந்த படப்பிடிப்பின் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சாருஹாசன் மறைந்த கன்னட அரசியல்வாதி பால்தாக்கரே போல காட்சியளிக்கிறார்.
இந்த படத்தின் மீதமுள்ள படப்பிடிப்புகள் கொரோனா லாக்டவுன் முடிந்ததும் தொடங்கும் என்று இந்த படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ.ஜி தெரிவித்துள்ளார்.