பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் இந்த லாக்டவுனில் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அதில் சர்ச்சைக்குரிய வாசகங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இவர் 2009 ஆம் ஆண்டு “நீலத்தாமரா” என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் “சிந்து சமவெளி” எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்தார்.
மைனா, நிமிர்ந்துநில், முப்பொழுதும் உன் கற்பனைகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா, அம்மா கணக்கு, தெய்வத் திருமகள் போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை ரசிகர்களிடையே பிடித்தார்.
மேலும் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளுக்கு பின் “ஆடை” என்ற படத்தில் மிகவும் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது பரபரப்பான மக்களிடையே பேசப்பட்டது. தற்போது இவர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் “அதோ அந்த பறவை போல” படத்தில் நடித்துள்ளார்.
தற்போது, “தான் தென்னிந்தியாவிலேயே நம்பர் ஒன் ஹீரோயின்” என்று அமலாபால் பெருமை பேசிய ஒரு வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இவர் சர்ச்சைக்குரிய விஷயங்களில் இணையதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். இந்த வீடியோவில் ஒருவர் சிரித்துக்கொண்டே வீடியோ எடுக்கிறார் அப்பொழுது அமலாபால் நான்தான் தென்னிந்தியாவிலேயே பெரிய ஹீரோயின் என்கிட்டே விளையாடுறியா என்று கூறுகிறார்.அது தற்போது வைரலாகி வருகிறது.