அஜித் நடிக்க விருப்பப்பட்ட இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!
July 1, 2020 / 08:35 AM IST
|Follow Us
இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளிவந்த “ஐயப்பனும் கோஷியும்” என்ற மலையாள திரைப்படம், பிறமொழி ரசிகர்களாலும் பெரிதாக வரவேற்கப்பட்டது. இந்தப் படத்தை சச்சி இயக்கியிருந்தார்.
சமீப காலமாகவே மலையாளத்தில் வெளிவரும் படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் அனைத்து மொழிகளிலும் தற்போது ரீமேக் செய்யப்படவுள்ளது.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த படத்தை இந்த குவாரண்டினில் கண்டுகளித்த தல அஜித்குமார், இயக்குனர் சச்சிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் பாராட்டுக்களை தெரிவித்தது மட்டுமல்லாமல், அவர் இவரது இயக்கத்தில் நடிக்க விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் பரிதாபமாக இந்த படத்தின் இயக்குனர் சச்சி மாரடைப்பால் சமீபத்தில் உயிரிழந்தார். இந்த செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தல அஜித்துக்கு இவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.
பிரித்திவிராஜ் பிஜூ மேனன் நடிப்பில், ரஞ்சித் தயாரித்து வெளியிடப்பட்ட இந்தப் படம் 50 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.
ஊரடங்கு முடிந்ததும் அஜித்தை நேரில் பார்த்து கதை சொல்ல விருப்பப்பட்டாராம் இயக்குனர் சச்சி. ஆனால் இவர் இறந்துவிட்ட செய்தி கேட்டதும் நேரில் சென்று இரங்கல் தெரிவிக்க முடியவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டாராம் அஜித். மேலும் தமிழ் மொழியில் இந்த படத்தின் ரீமேக்கை அவரே இயக்கவிருந்ததாகவும், அதில் பார்த்திபனும் கார்த்திக்கும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சச்சி விருப்பப்பட்டதாகவும் தெரிகிறது.
அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கை இனி யார் தமிழில் இயக்குவார்கள், இந்த படம் எப்பொழுது மற்ற மொழிகளில் வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.