நாடு முழுவதும் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.அதனால் மக்கள் தங்கள் வீட்டில் முடங்கியுள்ளார்கள். பொழுதுபோக்கிற்காக பழைய படங்களை பார்ப்பது,பழைய மேடை நிகழ்ச்சிகளை பார்ப்பது, அரசியலில் நடந்த சுவாரஸ்யமான விசயங்களை தேடிப் பார்ப்பது என மக்கள் தங்கள் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.
இதில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சல்மான்கான் இடையிலான சர்ச்சைக்குரிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோ ரௌனாக் படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது நடந்த சம்பவம் பற்றியது.
இந்த நிகழ்ச்சியில் சல்மான் கான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இவர்களுடன் முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபலும் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் சல்மான் கான் பேசியபோது நகைச்சுவையாக ஏ.ஆர்.ரகுமான் ஒரு சுமாரான இசையமைப்பாளர் தான் என்று கூறினார். இவ்வாறு கூறிவிட்டு அவர் ரகுமானிடம் கைகுலுக்க சென்ற போது அதை ரகுமான் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் ஒரு நேர்காணலில் ரகுமானிடம் எப்போது நீங்கள் சல்மான்கானுடன் இணைந்து வேலை செய்ய போகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் “எனக்கு பிடித்த மாதிரி படங்களில் எப்போதும் நடிக்கிறாரோ அப்பொழுதுதான் நான் இசையமைப்பேன்” என்று கூறிவிட்டார்.
இவர்களுக்கு இடையிலான இந்த சர்ச்சையான நகைச்சுவை கலந்த பேச்சுவார்த்தை அப்போது இணையதளங்களில் வைரலாக பரவியது. இதைப் பற்றி ஏ.ஆர்.ரகுமான் பின்னர், அடுத்த நாளே சல்மான்கான் போன் செய்து தான் நகைச்சுவையாக மட்டும் தான் கூறினேன் என்று கூறி இருந்தார் என்பதையும் வெளியிட்டாராம்.
இவ்வாறு சில வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சர்ச்சை வீடியோ தற்போது நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது.