தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் கூட! இவர் திரையுலகிற்கு நடிகர் மற்றும் இயக்குனர் அர்ஜூனின் அசிஸ்டெண்டாக அறிமுகமானார்.
பின்பு 2004ஆம் வருடம் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த “செல்லமே” படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இதை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் “சண்டக்கோழி” , தருண்கோபி இயக்கத்தில் “திமிரு” ஆகிய படங்களின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வர தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த “அவன் இவன்” படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
2013ம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “பாண்டியநாடு” படத்தில் தயாரிப்பாளராக உருவெடுத்தார். 2017ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று தலைமை அதிகாரியாகவும் பொறுப்பேற்றார்.
இவரின் விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனம் மூலம் சண்டக்கோழி-2, துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண் ஆறு வருடங்களாக பணத்தை கையாடல் செய்து வந்ததை தற்போது இவர் கண்டுபிடித்துள்ளார். சுமார் 45 லட்சம் பணத்தை இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட்டிர்க்கு கொடுக்காமல் தன் சொந்த அக்கவுண்டிற்கு மாற்றிவிட்டார் இந்த பெண். இவ்வாறு அவர் ஆறு வருடங்களாக செய்து வந்துள்ளாராம். இதை தற்போது கண்டுபிடித்த விஷால் அவரின் மீது புகார் அளித்துள்ளார்.
இது திரையுலகினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷால் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சக்ரா” இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுக இயக்குனர் அனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.