கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி!
July 11, 2020 / 04:24 PM IST
|Follow Us
சென்ற வருடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் கதையை பயோபிக்காக எடுக்கப் போவதாகவும், அந்தப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் செய்தி வெளியாகியது. இந்த செய்தி வெளியான முதலே இந்த படத்தை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.
இந்நிலையில் இந்த படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகி விட்டார் என்ற செய்தி பரவியது. இதை முற்றிலுமாக மறுத்துக் கூறிய மாஸ்டர் பட வில்லனான விஜய் சேதுபதி தான் இன்னும் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தற்போது கூறியுள்ளார்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையை எடுக்கும் இந்த படத்திற்கு ‘800’ என்று பெயரிட்டுள்ளார்கள். இது முத்தையா முரளிதரன் எடுத்த மொத்த விக்கெட்களின் எண்ணிக்கையாகும். மேலும் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனிடம் இந்த படத்தை பற்றி பேசியபொழுது தான் என்றுமே கிரிக்கெட் பார்த்ததில்லை என்றும் தனக்கும் கிரிக்கெட்டிர்க்கும் மிகவும் தூரம் என்றும் கூறியிருந்தாராம். அப்போது முத்தையா முரளிதரன் இதுதான் தன் கதாபாத்திரத்திற்கு மிகவும் தேவையான ஒன்று என்று குறிப்பிட்டார், என்று விஜய் சேதுபதி தற்போது கூறியுள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்து இந்த படத்திற்கு ஏற்றவாறு மாறுவதற்கு விஜய் சேதுபதிக்கு தனி ட்ரெய்லர் வைத்துள்ளார்களாம். இந்த லாக்டோன் காலத்தில் உடல் எடையை குறைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்றும், டிப்ரஷனால் அதிகம் உணவு எடுத்துக் கொண்டு உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம் என்றும் விஜய் சேதுபதி வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.
எம்எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் எப்போது வெளிவரும் என்று முத்தையா முரளிதரன் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.