தமிழ் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் அறிமுகமாகி பிறகு தன் கடின உழைப்பால் சிறந்த நகைச்சுவை நடிகராக தற்போது தமிழ் திரையுலகில் வலம் வருபவர் நடிகர் சூரி.
1998ஆம் வருடம் வெளிவந்த “மறுமலர்ச்சி” படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த நடிகர் சூரி, அதைத் தொடர்ந்து பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் 2009ஆம் வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் சூரி.
இந்த படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் பரோட்டா குறித்து ஒரு காமெடி அமைந்திருக்கும். அதிலிருந்துதான் அவர் “பரோட்டா சூரி” என்றழைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து 2011ஆம் ஆண்டு வெளிவந்த “போராளி”, எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த “சுந்தரபாண்டியன்”, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, “ரஜினிமுருகன்” பின்பு விஜய் நடிப்பில் வெளிவந்த “ஜில்லா” ஆகிய படங்களில் தன் நகைச்சுவை திறமை மூலம் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை தற்போது பிடித்துள்ளார்.
தற்போது தேசியவிருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார் சூரி.இந்த படத்தை எல்ரட் குமாரின் ஆர்.எஸ் இன்ஃவோடைன்மேன்ட் தயாரிக்கிறது.
இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் சூரி அதிக தாடி மற்றும் முடியை வளர்த்து புது கெட்டப் ஒன்றில் தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த லுக் அவரது ஹீரோ அவதாரததிற்கான லுக் தானோ என்று ரசிகர்கள் இந்த படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் “அண்ணாத” படத்திலும் சூரி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.