நா.முத்துக்குமார் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்ந்த சினிமா பிரபலங்கள்!
July 13, 2020 / 02:15 PM IST
|Follow Us
இயக்குனர் பாலு மகேந்திராவுடன் தனது எழுத்து பயணத்தை தொடங்கிய நா.முத்துக்குமார் பல இனிமையான பாடல்களை தன் வாழ்நாட்களில் நமக்கு பரிசளித்துள்ளார். நேற்று இவர் பிறந்த நாளையொட்டி யுவன் சங்கர் ராஜா, ஹரிஷ் கல்யாண், கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் என பலரும் இவரை நினைவு கூர்ந்துள்ளார்கள்.
1999ஆம் வருடம் வெளிவந்த “மலபார் போலீஸ்” படத்தில் ஒரு பாடலுக்கு வரிகளை எழுதத் தொடங்கிய இவர், பின் பல நூறு வெற்றி பாடல்களை எழுதியுள்ளார். இவர் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதது. இவர் 2007ஆம் வருடம் வெளிவந்த “கிரீடம்” படத்திலும், 2008-ஆம் வெளிவந்த “வாரணம் ஆயிரம்” படத்திலும் வசன எழுத்தாளராகவும் இருந்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.
இவர் கடைசியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் “சர்வம் தாளமயம்” படத்தில் பாடல் வரிகளை எழுதினார். நேற்று இவர் பிறந்தநாளையொட்டி இவரைப்பற்றி நினைவுகூர்ந்த யுவன் சமூக வலைத்தளத்தில் “நான் உங்களுடன் பாடலை உருவாக்குகிறேன் என்று நினைத்தேன், ஆனால் நான் நினைவை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்று அப்போது எனக்கு தெரியவில்லை” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் இவரையும் இவரது பாடல்களையும் மிகவும் மிஸ் பண்ணுவதாக பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் திரு குறிப்பிட்டுள்ளதாவது “ஒரு சிலரை தான் மறைந்த பின்பும் கூட புதைக்க முடியவில்லை நம்மால்…நா.முத்துக்குமார்” என்று அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் “உணர்வள்ளிக் கொட்டி அதன்மேல் உயர்ந்து நிற்கும் உன்னதமே. பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கிரிக்கெட்டர் அஸ்வின் “மாயாஜால் படத்தை பார்த்தேன். வாழ்க்கை மிகவும் கொடூரமானது” இன்று நா.முத்துக்குமாரின் இழப்பை எண்ணி பதிவிட்டுள்ளார்.
இப்படி நா.முத்துக்குமாரின் அனைத்து ரசிகர்களும் அவரது இழப்பை எண்ணி அவரது பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்ந்துள்ளார்கள்.