வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் தொடர்பான பிரச்சனை தான் இணைய தளம் முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வனிதா விஜயகுமார் லட்சுமி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தையில் ஒரு நேரலையில் தற்போது அவரை திட்டி தீர்த்துள்ளார்.
இதற்கு முன்னர் வனிதாவும் பீட்டர் பாலும் ஒரு பேட்டி அளித்திருந்தார்கள். அதில் பீட்டர் பால் தன்னை அப்பாவி என்றும், தன் முதல் திருமணத்தில் பல மனக்கசப்புகள் இருந்ததாகவும், அதனால் தான் அவரை விட்டு பிரிந்து இருந்ததாகவும், மேலும் தனக்கும் வனிதாவுக்கும் இடையே இருப்பது ஒரு நல்ல உறவு என்றும், தன் முதல் மனைவி கூறியது போல தான் குற்றவாளி அல்ல என்றும் கூறியிருந்தார்.
இதைப் பற்றி தயாரிப்பாளர் ரவீந்தர் ஒரு வீடியோவை வெளியிட்டு, பீட்டர் பால் கூறுவது போல அவர் அவ்வளவு ஒன்றும் நல்லவர் இல்லை என்றும், அவர் நடத்தையில் மோசம் என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றும் கூறினார்.அவர் வெளியிட்டுள்ள ஒரு மணிநேர வீடியோவில் பீட்டர்பால் பற்றி பல உண்மை தகவல்களை வெளியிட்டார்.
இதை தொடர்ந்து தற்போது பீட்டர் பாலில் பழைய துணை இயக்குனர் ஒருவர் தற்போது அவரைப் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரின் துணை இயக்குனர் பிரசாந்த் கிருபாகரன் கூறியுள்ளதாவது ” நாம் அனைவரும் நினைப்பது போல வனிதா ஒன்றும் குற்றவாளி அல்ல. அவர்தான் இங்கு பாதிக்கப்பட்டவர். பீட்டர் பால் தனது என்று கூறிய அந்த ஆபீஸ் அவருடைய அலுவலகம் அல்ல. இதற்கு முன்னர் அவர் இயக்கவிருந்த படத்தின் தயாரிப்பாளர் அலுவலகம் தான் அது. தன் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நேரலை ஒன்றை ஷுட் செய்ய வேண்டும் என்று அந்த தயாரிப்பாளரிடம் வேண்டி தான் அவர் அந்த அலுவலகத்தில் வனிதாவும் பீட்டர் பாலும் கடைசியாக வெளியான இந்த நேரலையை எடுத்தார்கள்” என்றிருக்கிறார்.
மேலும் அவர் ” நான் பீட்டர் பாலுடன் துணை இயக்குனராக ஒரு படத்திற்கு ஒப்பந்தம் ஆனேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் தான் என்னை அவருக்கு துணை இயக்குனராக சேர்த்து விட்டார். நான் இதில் சேர்ந்த பொழுது இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்கவேண்டும் என்று அதிக ஆவலுடன் இருந்தேன். ஆனால் பீட்டர்பால் கதை தன் மனதில் இருப்பதாகவும் அதை இன்னும் எழுதவில்லை என்றும் கூறிவந்தார். இதைப்பற்றி நான் தயாரிப்பாளரிடம் கேட்டபோது அவர் இதற்காகத்தான் நான் உங்களை சேர்த்து விட்டேன், நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்யுங்கள் என்று கூறினார். பிறகு பீட்டர் பால் இந்த கதையை பற்றி ஒரு சில பகுதிகளை மட்டும் கூறினார், அதைக் கேட்ட உடனேயே இது சில ஹாலிவுட் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் என்று நான் தயாரிப்பாளரிடம் சென்று கூறினேன். அதற்கு அவர் நான் அவருக்கு வார்த்தை கொடுத்து விட்டேன், அதனால் இந்த படத்தை நான் தயாரித்தாக வேண்டும், அதனால் எப்படியாவது முழு ஸ்கிரிப்டை தயார் செய்து விடுங்கள் என்று கூறினார். பிறகு நானும் மற்ற ஏடி களும் சேர்ந்து அவர் கூறிய கதையை வைத்து ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினோம். பின் பீட்டர் பால் திரைப்படத்தின் வேலைகளை ஆரம்பிக்க சொன்னார். பீட்டர் பால் இந்த கதைக்கு பெரிய பாலிவுட் ஹீரோயின் ஒருவரை அணுகுவதாகவும் கூறி, அவரிடம் கதை கூறுவதற்காக பாம்பே சென்றுவந்தார். அந்த ஹீரோயினின் மேனேஜர் கதைக்கு ஓகே கூறிவிட்டார் என்று சொல்லி பட வேலைகளை தொடங்கி விட்டார்கள். பின்பு தயாரிப்பாளர் செலவில் படத்தின் படப்பிடிப்பிற்காக ஹீரோயின் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். இங்கு வந்து கதையை கேட்ட ஹீரோயின் கதை பிடிக்கவில்லை என்று விட்டார். அதனால் தயாரிப்பாளருக்கு பல்லாயிரம் ரூபாய் நட்டம். பின்பு இந்த படத்திற்கு வேறு யாராவது அணுகலாம் என்று பேசி வந்த நிலையில் இந்த படம் கடைசியில் டிராப் ஆனது. இதனால் தயாரிப்பாளர் பீட்டர்பாலை அலுவகத்திற்கு அதன்பின் வரவேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது குடும்ப பிரச்சனை காரணத்திற்காக அலுவலகத்தில் பேட்டி எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதற்காக அந்த தயாரிப்பாளர் அவரை அனுமதித்தார். நான் இப்போது ஏன் இதைப்பற்றி பேசுகிறேன் என்றால் அவர் குடும்ப பிரச்சினை பற்றி பேசுவதற்காக அல்ல.தயாரிப்பாளரின் அலுவலகத்தை தன் அலுவலகம் என்றும், தினமும் ஆபிஸ் வருவதாகவும் இந்த நேரலையில் பீட்டர் பால் குறிப்பிட்டிருந்தார். அதற்காக மட்டுமே கூறுகிறேன். அந்த தயாரிப்பாளர் அப்ஷா ரேர் பினோமினன் புரோடக்சன் உரிமையாளர். பீட்டர் பால் அந்த ஸ்கிரிப்டை தயார் செய்யாததற்கு காரணம் அவர் தன்னைப் பற்றி பெருமை பேசிக்கொண்டு மட்டும்தான் இருந்தார், கதையில் கவனம் செலுத்தவே இல்லை. இதனால் நஷ்டம் அனைத்தையும் அந்த தயாரிப்பாளர்தான் சந்தித்தார்”.
” இதைவிட பெரிய சங்கடம் என்னவென்றால் ஒரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை எங்களுடன் புகைப்படம் எடுத்து யாரோ ஒருவருக்கு செல்போனில் அனுப்பி வந்தார். அப்போது யார் என்று கேட்டதற்கு அவர்தான் மனைவி என்றும், இந்த கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார் என்றும் கூறினார். ஒருநாள் அவர் மனைவி புகைப்படத்தை காட்டும்படி கேட்டதற்கு அவர் ஒருவரின் புகைப்படத்தை காட்டினார், அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் இன்று அவருடன் முதல் மனைவி என்று சண்டையிட்டு வரும் ஹெலன் அந்த புகைப்படத்தில் இல்லை அதில் வேறு ஒரு பெண் இருந்தார்”என்று பல உண்மைகளை வெளியிட்டுள்ளார் பீட்டர் பாலின் துணை இயக்குநர்.
ஆனால் பின்னணி என்னவென்றால் இந்த அலுவலகத்தை பற்றி விசாரித்ததில் இதை 3 இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து இயக்கி வருவதாக செய்தி வந்தது. அதில் வேதநாயகம் பீட்டர் பால்,அப்ஷா மற்றொருவரும் என்று குறிப்பிட்டிருந்தது. இவரின் பதிவு மூலம் பீட்டர் பாலின் உண்மை நிலைமை என்னதான் என்று குழப்பம் நிலவி வருகிறது.
Attachments area