இணையதளத்தில் எங்கு திரும்பினாலும் வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலின் திருமணம் குறித்த விவகாரம்தான் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜயககுமாரின் மகள் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணமான மறு நிமிடமே பீட்டர்பாலின் முதல் மனைவி தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற பிரச்சனையை கிளப்பினார்.
அன்றிலிருந்து கடும் விமர்சனங்களுக்கு பலரால் உள்ளான வனிதா விஜயகுமார், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வந்தார். சிலர் மீது சைபர் புள்ளியிங் புகாரும் அளித்தார். அதுமட்டுமின்றி சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்தர், கஸ்தூரி ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டதையடுத்து மீண்டும் வனிதா அவர்களை திட்டி தீர்த்துள்ளார்.
இவ்வாறாக பல இடங்களிலிருந்து பிரச்சனையை சந்தித்துவந்த வனிதா விஜயகுமார், என்னதான் தகுந்த பதிலடி கொடுத்து வந்தாலும் அனைவரும் இவரை பற்றிய விமர்சனத்தை நிறுத்தவில்லை.
அதனால் வனிதா தற்போது தனது ட்விட்டர் அக்கவுன்ட்டை டெலிட் செய்துவிட்டார். மேலும் யூடியூப்பில் அவரது சேனலில் உள்ள கமெண்ட் செக்ஷனை டிசேபிள் செய்துவிட்டார்.
தற்போது முழுவதுமாக சோசியல் மீடியாவிலிருந்து விலகியிருக்கலாம் என்று அதிரடியாக முடிவு செய்துள்ளார் வனிதா விஜயகுமார். இவர் இவ்வாறு விலகியது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியான விஷயமாக இருப்பினும், அவர் யூடியூபில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிடுவார் என்பது அவர்களுக்கு மனநிறைவை தந்துள்ளது. இந்த அதிரடியான வனிதாவின் முடிவைத் தொடர்ந்து இனி என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.