தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான குஷ்பூ தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர்.சியை திருமணம் செய்து இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இந்த லாக்டவுனில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் குஷ்பு, தற்போது வொர்க்கவுட் செய்வது போன்ற புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் எப்பொழுதும் டச்சுலேயே இருக்கும் குஷ்பூ, அழகு பராமரிப்பு சார்ந்த விஷயங்களை அவ்வப்போது தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.
தற்போது சில யோகா போஸ்களை கனகச்சிதமாக செய்து அந்த போட்டோக்களை வெளியிட்டது முதல் ஹன்சிகா மோத்வானி, பிருந்தா மாஸ்டர், கிகி விஜய் போன்றோர் இவரை உடனடியாக பாராட்டி கமெண்ட் செய்தார்கள். மேலும் அவரது ரசிகர்களும் பாராட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
குஷ்பூ “உடலின் நெகிழ்வு தன்மையை சோதிக்கிறேன் #வொர்க்கவுட் மோட்#ஆரோக்கியமான வாழ்வு” என்று அந்த புகைப்படங்களை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடிகை குஷ்பூ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் “அண்ணாத்த” எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் குஷ்புவுடன் நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.