மீண்டும் களமிறங்கும் ஹிப்ஹாப் தமிழா இண்டிபெண்டன்ட் ஆல்பம்!
August 5, 2020 / 12:22 PM IST
|Follow Us
ஹிப்ஹாப் தமிழா என்றழைக்கப்படும் ஆதி இண்டிபெண்டன்ட் ஆல்பம் வெளியிட்டு அதன்மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர். பின் அதிலிருந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தன் இசை மற்றும் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 2011ம் ஆண்டு வெளியான “கிளப்புல மப்புல” என்ற பாடல் மூலம் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதி, 2012ஆம் ஆண்டு திங்க் மியூசிக் கிரியேட்டர்ஸ் மூலம் “ஹிப்ஹாப் தமிழன்” என்று ஆல்பம் வெளியிட்டார்.
தற்போது அதே திங்க் மியூசிக் கிரியேஷன்ஸ் மூலம் ஹிப்ஹாப் தமிழா தனது அடுத்த இன்டிபென்டன்ட் ஆல்பத்தை வெளியிடப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதியிலிருந்து இந்த ஆல்பம் முழுமையாக வெளியிடப்படும் என்றும், “நான் ஒரு ஏலியன்” எனும் இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது தீங்க் மியூசிக்.
தற்போது நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என்று பல பரிமாணங்களை எடுத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, இந்த லாக்டவுனில் பல வருடங்களுக்கு பிறகு தனி ஆல்பம் தற்போது வெளியிட உள்ளார். பட வேலைகளில் பிசியாக இருந்ததால் இவ்வளவு நாள் தனி ஆல்பம் வெளியிடவில்லை போல.
என்னதான் இருந்தாலும் இண்டிபெண்டன்ட் ஆல்பத்திலிருந்து தனது வாழ்க்கையை தொடங்கிய ஆதி, இதற்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். அதனால் அவரது ரசிகர்கள் தற்போது இந்த சிங்கிள்காக காத்திருக்கிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.