தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சத்யராஜ் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தீர்ப்புகள் விற்கப்படும்”. பல வருடங்களுக்கு பிறகு சத்யராஜ் மீண்டும் சோலோ ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார்.
இவருடன் இந்த படத்தில் ‘தடம்’ படம் புகழ் ஸ்மிருதி வெங்கடேஷ், ஹரிஷ் உத்தமன், லிசி அண்டனி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை இயக்குனர் தீரன் எழுதி இயக்கியுள்ளார்.
ஹனி பீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்தப்படத்திற்கு பிரஷாந்த் எஸ்.என் இசையமைக்கிறார். கருடவேக அஞ்சி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நவ்ஃபல் அப்துல்லா இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்கிறார்.
தெலுங்கிலும் உருவாக்க படவுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியான நிலையில், கடந்த பக்ரீத் அன்று இந்த படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த படத்தின் போஸ்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் சஞ்சீவ் மீராசாஹிப் ராவுத்தர் “மக்களிடம் இந்த படத்தின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறோம். இது எங்களுக்கு இந்த திரைப்படத்தை நல்ல விதமாக கொடுப்பதற்கு மீண்டும் ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது. இதன் பெருமை அனைத்தும் நடிகர் சத்யராஜ் அவர்களையே சேரும்”என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் “இந்த படத்தின் கடைசி கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இது முடிந்தவுடன் சென்சார் போர்டுக்கு படம் அனுப்பி வைக்கப்படும். இந்த படத்தை வெளியிடுவதற்கு எங்களால் காத்திருக்க முடியவில்லை” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டரில் நடிகர் சத்யராஜ் கம்பீரமாக காட்சி அளித்துள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.