உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்குரிய விஷயங்களில் பின்பு சிக்கிய நடிகை மீரா மிதுன், தற்போது ஒரு சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபகாலமாகவே பிரபலங்கள் குறித்து சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு வரும் மீரா மிதுன், நடிகர் சூர்யா மற்றும் விஜய் குறித்து தவறான கருத்துக்களையும், அவர் குடும்பம் குறித்து தவறான கருத்துக்களையும் தற்போது பதிவிட்டார்.
இது இணையதளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீராமிதுனை சரமாரியாக திட்டி வருகிறார்கள். மேலும் மீரா மிதுன் நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக தான் இப்படி செய்கிறார் என்று பலரும் வசைபாடி வருகிறார்கள்.
நடிகர் விஜய் பற்றி அவர் கூறிய கருத்துக்களையும், சூர்யா பற்றி அவர் கூறிய கருத்துக்களையும் குறித்து தன் எச்சரிக்கையை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார் நடிகை சனம் ஷெட்டி.
இதில் விஜய் குறித்த அவரது கருத்துக்களை பற்றி பேசியபோது சனம் ஷெட்டி “வாரிசு சலுகையால் விஜய் சுலபமாக சினிமா துறைக்குள் நுழைந்திருக்கலாம். ஆனால் ஐந்து வருடங்கள் கஷ்டப்பட்ட பிறகுதான் அவர் தன் முதல் வெற்றியை அடைந்தார். அவருக்கு ஆரம்ப கட்டங்களில் நிறைய விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி தன் கடின உழைப்பின் மூலம் மட்டுமே அவர் இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை தற்போது கொண்டுள்ளார். இது அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி மட்டுமே. இதைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. இதையெல்லாம் யாராலும் பணத்தால் வாங்க முடியாது. ஒரு அங்கீகாரம் பெற்ற பெரிய நடிகரை பற்றி பேசும் முன்பு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். உங்களுக்கு பதில் கூறுவதற்கு அவர் இறங்கி வர மாட்டார். உங்களுக்கு பதிலளிக்க நாங்களே போதும். நான் ஒரு தளபதி ரசிகை என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன்” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.
மேலும் அவர் ட்விட்டரில் மீராமிதுனின் அக்கவுண்டை பற்றி அனைவரும் புகார் அளித்துள்ளதாகவும், அதை நீக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு மீராமிதுனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீப காலமாகவே மீரா மிதுன் பிரபலங்களை வம்பிழுப்பதும் அதை அவரது ரசிகர்கள் எதிர்த்து பேசுவதும் நடந்து வருகிறது. இதனால் மீராமிதுனை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகிறார்கள்.