ஆகஸ்ட் 23-ஆம் தேதி விஜய்யை நேர்ல சந்திக்கலாம்… எங்க தெரியுமா?
August 8, 2020 / 06:30 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்த படத்தை விஜய்யின் நெருங்கிய உறவினரான சேவியர் பிரிட்டோ தான் தயாரித்துள்ளார். சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவிற்கும், நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷிற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது, இவர்களின் திருமணம் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி சென்னையிலுள்ள சாந்தோம் தேவாலயத்தில் வைத்து நடைபெறவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் விஜய் அவரது குடும்பத்துடன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.