லட்சுமி ராமகிருஷ்ணனிடம் 2.50கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ள வனிதா!
August 10, 2020 / 09:20 PM IST
|Follow Us
சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.
பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே பலரும் வனிதாவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள். இதனால் வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவிலிருந்து விலகியிருக்க முடிவு செய்து, ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார்.
இவர் ட்விட்டரிலிருந்து விலகிய மறுநாளே மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்து தான் ஏன் ட்விட்டரிலிருந்து விலகினார் என்று யாருக்கும் தான் பயப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் தனக்கு வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார். இதற்கிடையில் வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒரு வீடியோ கால் பதிவு நடந்தது. இதில் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா தகாத வார்த்தைகளால் திட்டி பேசியிருந்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.
பலரும் வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனை திட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவின் இந்த செயலை கண்டித்து போலீசில் புகார் அளித்து நோட்டீஸ் அனுப்பினார்.
தற்போது புதிய தகவல் என்னவென்றால், லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாமீது அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்து சுமார் 1.25 கோடி ரூபாய் அபராதம் செலத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வனிதா ட்விட்டரில் பதிவிட்டார்.
இதைத்தொடர்ந்து தற்போது வனிதாவும் 2.5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறுகளை பரப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.