தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் வில்லன் என்று இரு கதாபாத்திரத்திலும் நடித்து, இரண்டிலுமே தன் திறமை மூலம் ரசிகர்களை ஈர்த்த நடிகர் மொட்டை ராஜேந்திரனின் இதுவரை காணாத புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் ஏன் வைரலாகிறது என்றால் மொட்டையாக மட்டுமே நாம் கண்ட ராஜேந்திரன், ஆரம்ப காலகட்டத்தில் முடியுடன் நடித்தபோது எடுத்த புகைப்படம் இது. இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான “பிதாமகன்” என்ற படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக திரையுலகிற்கு அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன்.
இதைத் தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் வெளியான “நான் கடவுள்” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படம்தான் அவரது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் தொடங்கி பின்பு குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய மொட்டை ராஜேந்திரன் வில்லனாகவும் காமெடியனாகவும் அசத்தி வருகிறார்.
அஜித், விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்துள்ளார். தற்போது வைரலாகி வரும் இந்தப் புகைப்படத்தில் இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் அருகில் நின்றிருப்பார். இவர் நடிகர் மோகன்லாலுடன் பணியாற்றியபோது இதை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் கிருஷ்ணா சாய் இயக்கத்தில் வெளியான “50/ 50” படத்தில் நடித்திருந்தார். இவர் சுமார் 500 தென்னிந்திய படங்களில் இன்றுவரை நடித்திருப்பார். தற்போது இவர் முடியுடன் இருக்கும் ரேர் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.