“நான் கொரோனாவை வென்றது எப்படி?” – விஷால் தந்தை விளக்கம்!
August 11, 2020 / 05:09 PM IST
|Follow Us
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அரசு லாக்டவுன் அறிவித்துள்ளது. மேலும் மக்களை மாஸ்க் அணிவது, சமூக விலைகளை கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.
எனினும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக விஷால் செய்தி வெளியிட்டிருந்தார்.
நடிகர் விஷாலின் தந்தைக்கு முதலில் கொரோனா பாதிப்பு வந்ததாகவும் அவரை கவனித்துக் கொண்டிருந்த விஷாலுக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டதாகவும் செய்தி வெளிவந்தது. பின்பு இவர்கள் இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட சிகிச்சை எடுத்து வந்தார்கள்.
சமீபத்தில் விஷால் தாங்கள் இருவரும் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் அதற்கு ஆயுர்வேத மருந்துகளை உட்கொண்டதாகவும், தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் கொரோனாவிலிருந்து விடுபட்டு விடலாம் என்றும் விஷால் செய்தி வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து தற்போது விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி 82 வயதில் தான் கொரோனாவை வென்றது எப்படி என்று ஊக்குவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் குழந்தைகளின் நல்ல கவனிப்பு, குடும்பத்தாரின் ஆதரவு, கவனமாக தனிமைப்படுத்திக் கொள்ளுதல், மனித தைரியம் மற்றும் ஃபிட்னஸ் இருந்தால் கொரோனாவை எந்த வயதினரும் வென்றுவிடலாம் என்று அனைவருக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த வீடியோவில் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஷால் தற்போது எம்எஸ் ஆனந்தன் இயக்கத்தில் “சக்ரா” என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.