லாக்டவுனில் ரொமான்டிக்காக மாறிய இயக்குனர் செல்வராகவன்!
August 12, 2020 / 06:00 PM IST
|Follow Us
2003 ஆம் ஆண்டு வெளியான “காதல்கொண்டேன்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதற்கு முன் “துள்ளுவதோ இளமை” படத்தின் கதையை இவர்தான் எழுதியிருந்தார்.
இவர் இயக்கத்தில் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்”, “புதுப்பேட்டை”, “மயக்கம் என்ன” போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இவர் இயக்கத்தில் வெளியான “இரண்டாம் உலகம்” திரைப்படம் வித்தியாசமான கதை களத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டது.
கடைசியாக இவர் சூர்யா நடிப்பில் “என்ஜிகே” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் ரொமான்டிக்கான வரிகளை எழுதி பதிவிட்டுள்ளார்.
தற்போது தனது அடுத்த படத்திற்கான கதையுடன் தயாராக இருக்கும் செல்வராகவன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். மேலும் அவரது பழைய படங்கள் குறித்த சுவாரசியமான விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
தன்னுடைய தற்போதைய பதிவில் செல்வராகவன் குறிப்பிட்டுள்ளதாவது “கடந்த காலத்தில் ஒருநாள் திருப்பி கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? நான் நண்பர்களுடன் மாலை முழுதும் அரட்டையடித்து விளையாடி தூரத்தில் அப்பா நிழல் பார்த்து வீட்டிற்கு ஓடி, அம்மா வைத்ததை சாப்பிட்டு எந்த கவலையும் இல்லாமல் தூங்கின பொழுதை கேட்பேன்” என்றிருக்கிறார்.