உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமான மீராமிதுன், தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் சிக்கி தற்போது ட்விட்டரில் தன் சர்ச்சைக்குரிய கமெண்ட் மூலம் வைரலாகி வருகிறார்.
முன்னணி நட்சத்திரங்கள் குறித்து வசைபாடி வரும் மீராமிதுனை பலரும் கோபத்துடன் திட்டியும் கலாய்த்தும் வருகிறார்கள். சமீபத்தில் இவர் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசியதற்கு அவரது ரசிகர்கள் மீரா மிதுன் இவர்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் மீராமிதுன் இதை ஒரு நெகடிவ் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இவர் பிரபல நட்சத்திரங்கள் மற்றும் அவர்கள் குடும்பம் பற்றி கொச்சையாக பேசி வருகிறார். இது குறித்து நடிகர் சங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட நடிகர்களோ எந்த விதமான எதிர்ப்புகளும் தெரிவிக்காத நிலையில் இயக்குனர் பாரதிராஜா இதுகுறித்து ஆவேசமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அந்த அறிக்கையில் பாரதிராஜா தங்களது ரசிகர்களை கட்டுப்படுத்துமாறு நட்சத்திரங்களிடன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த அறிக்கைக்கும் தகுந்த பதிலடி கொடுத்து தவறாக விமர்சித்திருந்தார் மீரா மிதுன். இதுதொடர்பாக தற்போது நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் நடிகர் சூரியா கூறியிருந்ததாவது “எனது தம்பி தங்கைகளின் நேரமும் சக்தியும் ஆக்கபூர்வமான செயல்களில் பயன்பட வேண்டும் என்பதே எனது ஆசை. எனவே வீணான விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான விஷயங்களில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்துங்கள்” என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சூர்யாவின் இந்த பக்குவமான பதிவை பாராட்டியுள்ள கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளதாவது “சுமத்தப்பட்ட பழியின் மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று. பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை. பாராட்டுகிறேன். நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை” என்று பதிவிட்டிருந்தார்.
சுமத்தப்பட்ட பழியின்மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று. பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை; பாராட்டுகிறேன். நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை.@Suriya_offl
இதற்கு பதிலளித்துள்ள மீரா மிதுன் “கவிஞரே ஒரு 14 பெண்கள் உங்கள் மேல் பழி போட்டார்களே அதற்கு எப்போது பதில் சொல்வீர்கள்” என்று சர்ச்சையாக வைரமுத்துவை கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.