தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தன் வீட்டில் மரம் நடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
இணையதளம் முழுவதும் தற்போது விஜய் செடி நடுவது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜய்யை பின்பற்றி தொடர்ந்து அவரது ரசிகர்களும் தற்போது மரம் நட்டு அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
மேலும் மகேஷ் பாபு டேக் செய்ததுபோல ஸ்ருதிஹாசனும் இந்த சேலஞ்சை ஏற்று மரம் நட்டு புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது இந்த புகைப்படங்களைவிட விஜய் சிறுவயதில் தன் தங்கையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் வெளியீடு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையில் இந்த படத்தின் பாடல் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்தப்படத்தில் அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். எக்ஸ்.பி ஃபிலிம் கிரேட்டர்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படத்தின் வெளியீட்டை தளபதி விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.