சூப்பர் ஹிட்டான சித் ஸ்ரீராம் பாடலை பாடிய ராஷி கண்ணா… வைரலாகும் வீடியோ!
August 17, 2020 / 05:28 PM IST
|Follow Us
‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.
ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். அதர்வாவின் ‘இமைக்கா நொடிகள்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ராஷி கண்ணா.
அதன் பிறகு ‘அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன்’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ராஷி கண்ணா நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘ஹுஷாரு’ என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ‘உண்டி பொராதே’ பாடலை பாடியுள்ளார். படத்தில் இப்பாடலை பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.