ஸ்பார்டனாக மாறிய சந்தானத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து இயக்குனர்!
August 17, 2020 / 05:09 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக உருமாறி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் விரைவில் “பிஸ்கோத்” என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.
கண்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த ட்ரெய்லரில் சந்தானம் பல வேடங்களில் நடித்திருந்தது போல காட்சிகள் அமைந்திருந்தது. பாகுபலியில் வரும் ஒரு கதாபாத்திரத்தை போன்று ஸ்பூஃவ் வேடம் ஒன்றும் இருந்தது.
இந்த படம் குறித்து தற்போது இயக்குனர் கண்ணன் கூறியுள்ளதாவது “இந்த படத்தின் பிரீயாடிக் பகுதிகளை மிகுந்த உயிரோட்டத்துடன் ஆக்குவதற்காக படத்தின் ஆர்ட் டைரக்டர் ராஜ்குமார் டிசைனர் ப்ரியா மற்றும் நான் பல மணி நேரங்களாக லிட்ரேச்சர் குறித்து ஆராய்ச்சி செய்து மேலும் 300 ஸ்பார்டன்ஸ் படங்களிலிருந்தும் குறிப்புகள் எடுத்து இந்த கதாபாத்திரத்திற்காக உடையையும் தேர்வு செய்து உருவாக்கியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் சண்டை களம் பற்றி கேட்டபோது “ஒரு குறிப்பிட்ட சண்டைக்காட்சியை தீப்பொறிகள் வைத்து படம் பிடித்துள்ளோம். ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் நூறு ஜூனியர் ஆர்டிஸ்ட்களை வைத்து பிரமாண்டமாக இந்த காட்சியை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் சில கத்திச்சண்டை காட்சிகளும் அமைந்துள்ளது. இதற்காக சந்தானம் சில வாரங்கள் பயிற்சி எடுத்து நடித்துள்ளார். சந்தானம் தவிர ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்தர், லொள்ளு சபா மனோகர், புஜ்ஜி பாபு, சிவசங்கர் மாஸ்டர் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். சுவாதி முப்பாலா மற்றும் தாரா அலீஷா பெரி ஆகியோர் ராணி வேடங்களில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தில் ஆனந்தராஜ் ஜிப்பரிஷ் மொழியில் பேசி நகைச்சுவை கூட்டியுள்ளார்” என்று இந்த திரைப்படம் குறித்து கண்ணன் கூறியுள்ளார்.